திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.98 கோடி காணிக்கை

 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 79,426 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 25,889 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.3.98 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 23 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர்.

இவர்கள் சுமார் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

Related Stories: