சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து விற்பனை..! நகை வாங்குவோர் சற்று நிம்மதி

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,15,520க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.14,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.280க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவு உயர்ந்தது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில், தமிழ்நாட்டை பொறுத்தவரை தங்க விலை ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் போன்ற தனிப்பட்ட கொண்டாட்டங்களுக்கு மட்டுமல்லாமல், அட்சய திருதியை போன்ற நிகழ்வுகளுக்கும் தங்கம் பரவலாக வாங்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்க விலை தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில், விலை உயர்வு என்பது திருமண நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு கூடுதல் சுமையாக மாறி வருகிறது. இதனால் தங்கத்தின் விலை எப்போது சரியும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்திருப்பது நகை வாங்குவோர் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: