மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு

காரிமங்கலம், பிப்.16: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜைகள் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா சரவணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் இயக்குனர் ரவிசங்கர், பூசாரி முருகன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

இதே போல், காரிமங்கலம் அருணேஸ்வரர் மலைக்கோவில், பெரியாம்பட்டி பசுபதீஸ்வரர் கோவில், அனுமந்தபுரம் சிவன் உட்பட பல்வேறு சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி முன்னிட்டு நான்கு கால பூஜைகள் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

Related Stories: