கஞ்சாவுடன் வாலிபர் கைது

திண்டுக்கல், மார்ச் 2: தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன்,தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் அஞ்சலி ரவுண்டானா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நகர் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திண்டுக்கல் என்ஜிஓ காலனியை சேர்ந்த பம்பா வாசன் (26) என்பதும், அவரது டூவீலரில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

 

Related Stories: