கஞ்சா விற்ற 3 பேர் கைது

விருதுநகர், மார்ச் 2: விருதுநகர் ஊரக போலீசாருக்கு ககஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் சத்திரரெட்டியபட்டி மேல்நிலைப்பள்ளி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்றிருந்த 3 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதைடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விற்பனை செய்ய வந்திருந்த உன்னிபட்டியை சேர்ந்த ராகுல்குமார் (20), சத்திரரெட்டியபட்டியை சேர்ந்த சந்துரு (26), காந்தி நகரை சேர்ந்த விக்னேஷ்குமார் (26) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: