சேலம் மாவட்டம் ஓமலூரில் பாமக சார்பில், தமிழக மகளிர் உரிமை மீட்பு பயண கூட்டம் நடைபெற்றது. பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா கலந்து கொண்டு பேசியதாவது: பெண் பிள்ளைகளை எப்படி ஒழுக்கத்துடன் வளர்க்கிறோமா, அதேபோல ஆண் பிள்ளைகளையும் ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும்.
ஆண் பிள்ளைகளுக்கு போதை பழக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இளைஞர் சமுதாயம் மிகப்பெரிய பாதிப்பில் உள்ளனர். இப்படி இருந்தால், நம் பெண் பிள்ளைகளுக்கு எப்படி நல்ல மாப்பிள்ளை பார்ப்பது?. நீங்கள் எல்லாம் ஒழுக்கமானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அன்புமணி மிகவும் ஒழுக்கமானவர். அவருக்கு துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு சவுமியா அன்புமணி பேசினார்.
