25 ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 109 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ், வெகுமதி

திருச்சி, பிப். 4: திருச்சி மாநகர காவல்துறையில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணி புரிந்த 109 போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பாராட்டு விழா நேற்று கே.கே.நகர் காவலர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. மாநகர கமிஷனர் லோகநாதன் கலந்து கொண்டு அப்பழுக்கற்ற முறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி பாராட்டினார். மேலும் தமிழக அரசு வழங்கிய ரூ.2 ஆயிரம் வெகுமதியும் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதில் மாநகர துணை கமிஷனர்கள் பவன்குமார் ரெட்டி, வேதரத்தினம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories: