மூத்த மாவோயிஸ்ட் தலைவர் மரணம்

ராஞ்சி: மாவோயிஸ்ட்டுகளின் மூத்த தலைவரான பிரசாந்த் போஸ்(80) ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா, சட்டீஸ்கர் மாநிலங்களில் நடந்த பல்வேறு தாக்குதல்கள், வன்முறை சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த 2021ல் பிரசாந்த் போஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பிரசாந்த் போஸின் உடல் நிலை நேற்று திடீரென பாதிக்கப்பட்டு ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் அவருடைய மரணத்துக்கான சரியான காரணங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று ராஞ்சி மூத்த எஸ்பி ராகேஷ் ரஞ்சன் தெரிவித்தார்.

 

Related Stories: