×

ஜம்மு சர்வதேச எல்லையில் பாக்.டிரோன் மூலமாக வீசப்பட்ட ரூ.40 கோடி மதிப்பு ஹெராயின் பறிமுதல்

ஜம்மு: ஜம்முவில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோன் மூலமாக வீசப்பட்ட 6.5கிலோ ஹெராயினை வீரர்கள் பறிமுதல் செய்தனர். ஜம்மு காஷ்மீரின் ஆர்எஸ் புரா செக்டாரில் சர்வதேச எல்லையில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் சந்தேகத்துக்கு உரிய வகையில் டிரோன்கள் நடமாட்டம் இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள வயல்களில் எல்லைப்பாதுகாப்பு படை மற்றும் காவல்துறையின் 165வது பட்டாலியன் வீரர்கள் கூட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு மஞ்சள் நிற பாக்கெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சோதனையில் அவை ஹெராயின் என்பது உறுதி செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு ரூ.40கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Tags : Jammu International Border ,Jammu ,Pakistan ,International Border ,Jammu and ,Kashmir ,RS Pura ,
× RELATED ‘வெளியே போ’ என்று ஆவேசமாக கூறி பெண்...