- அஜித் பவார்
- ரோஹித் பவார்
- அமித் ஷா
- புனே
- துணை முதலமைச்சர்
- மகாராஷ்டிரா
- தேசியவாத காங்கிரஸ் கட்சி
- பாராமதி
- சரத் பவார்
- சட்டமன்ற உறுப்பினர்
புனே: மகாராஷ்டிரா துணை முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் தலைவராகவும் இருந்த அஜித்பவார், கடந்த ஜனவரி 29ம் தேதி பாராமதியில் விமான விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக கடந்த 10ம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பு நடத்திய சரத்பவார் கட்சி எம்எல்ஏவும், அஜித்பவாரின் உறவினருமான ரோகித்பவார், பாராமதி விமான விபத்தில் நாசவேலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்க காரணம் இருப்பதாக கூறினார். அதுபோக பல்வேறு கேள்விகளை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் பாராமதி விமான விபத்து குறித்து விரிவான மற்றும் வெளிப்படையான விசாரணை கோரி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ரோகித்பவார் கடிதம் எழுதியுள்ளார்.
