- தெலுங்கானா உள்ளாட்சித் தேர்தல்கள்
- திருமலா
- தெலுங்கானா
- காங்கிரஸ்
- பாஜக
- சிபிஎம்
- பிஆர்எஸ்
- நிஜாமாபாத் மாநகராட்சி…
திருமலை: தெலங்கானா மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவில் 7 மாநகராட்சிகளில் 4 இடங்களை காங்கிரசும், பாஜக மற்றும் சிபிஎம் தலா 1 இடமும் கைப்பற்றியது. ஆனால் பிஆர்எஸ் கட்சிக்கு ஒரு மாநகராட்சியும் கிடைக்கவில்லை. நிஜாமாபாத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 28 வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 18, எம்ஐஎம் 13, பிஆர்எஸ் 1 இடம் பிடித்துள்ளது. ஆனால் மேயர் பதவிக்கு 31 இடம் தேவைப்படுவதால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இருப்பினும் எம்ஐஎம்- காங்கிரஸ் இணைந்து மேயர் பதவியை பகிர்ந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் 116 நகராட்சிகளில் 70 இடங்கள் காங்கிரசும், 15 இடங்கள் பிஆர்எஸ் கட்சியும், ஒரு இடத்தில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது. 30 இடங்களில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் 30 நகராட்சிகளில் குதிரை பேரம் துவங்கி உள்ளது.
