×

ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைக்கப்படும் மே.வங்கம்: ஒன்றிய அமைச்சர் விமர்சனம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பாஜ ஆசிரியர் பிரிவு மாநாட்டில் உரையாற்றிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ‘‘மேற்கு வங்கத்தை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் ஒடிசா மாநிலமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஊழல் பெருகி வருகின்றது. தற்போதைய ஆட்சி ஊழல் மற்றும் ஊடுருவலுக்கு ஒப்படைத்துவிடப்பட்டுள்ளது. எனவே ஆட்சி மாற்றம் வேண்டும். இந்த ஊழல் நிறைந்த நிர்வாகத்தை அகற்றுவதற்கும் அதிகார மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. இங்கும் பாஜ தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசு வேண்டும்” என்றார்.

Tags : West Bengal ,Union Minister ,Kolkata ,Union Education Minister ,Dharmendra Pradhan ,BJP ,Kolkata, West Bengal ,government ,Odisha ,West Bengal… ,
× RELATED ‘வெளியே போ’ என்று ஆவேசமாக கூறி பெண்...