தங்கம் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2 வாரமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக விலை குறைந்து வந்தது. 12ம் தேதி பவுனுக்கு ரூ.1,520 குறைந்து பவுன் ரூ.1,16,800க்கு விற்றது.நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,400க்கும், பவுனுக்கு ரூ.1,600 குறைந்து பவுன் ரூ.1,15,200க்கும் விற்றது. 2 நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.3,120 குறைந்தது. இந்நிலையில், வார இறுதி நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. நேற்று கிராமுக்கு ரூ.160 உயர்ந்து கிராம் ரூ.14,560க்கும், பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்து பவுன் ரூ.1,16,480க்கும் விற்றது. அதே நேரத்தில் நேற்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.280க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும்.

Related Stories: