மும்பையில் நடந்த சொத்து ஒப்பந்தம்; சொகுசு பங்களாவை ரூ.14.5 கோடிக்கு விற்ற அபிஷேக்

மும்பை: பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தனது சொகுசு வீட்டை 14.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள மகாலட்சுமி ஏரியாவில் தனக்கு சொந்தமான சொகுசு வீட்டை விற்பனை செய்துள்ளார். சுமார் 14.5 கோடி ரூபாய் மதிப்பில் நடந்த இந்த சொத்து விற்பனை கடந்த 12ம் தேதி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. கோத்ரெஜ் பிளானட் என்ற பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 40 மற்றும் 41வது தளங்களில் உள்ள இந்த வீடு 2,249 சதுர அடி பரப்பளவு கொண்டது. மூன்று கார் நிறுத்தும் இடங்களுடன் கூடிய இந்த வீடு ஒரு சதுர அடி சுமார் 64,473 ரூபாய் என்ற விலையில் கைமாறியுள்ளது.

இந்த சொகுசு வீட்டை தனியார் நிறுவன பங்குதாரர் ரிஷி மண்டாவத் மற்றும் ஸ்மிதா மேத்தா ஆகியோர் வாங்கியுள்ளனர். ஏற்கனவே நடிகர் அமிதாப் பச்சன், அயோத்தி மற்றும் குஜராத்தின் கிஃப்ட் சிட்டி பகுதிகளில் நிலம் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்துள்ள நிலையில், அவரது மகனான அபிஷேக் பச்சனும் தற்போது இந்த விற்பனையை மேற்கொண்டுள்ளார். மேலும் அபிஷேக் பச்சன் குஜராத் மாநிலத்தில் உள்ள கிஃப்ட் சிட்டியில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுடன் கூடிய ஒரு புதிய பிரம்மாண்ட திட்டத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: