தங்கம் விலை மேலும் மாற்றம் பவுனுக்கு ரூ.1,600 குறைந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் சரிந்தது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2 வாரமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை குறைந்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.14,600க்கும், பவுனுக்கு ரூ.1,520 குறைந்து ஒரு பவுன் ரூ.1,16,800க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் 2வது நாளாக நேற்று தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்தது. நேற்று கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,400க்கும், பவுனுக்கு ரூ.1,600 குறைந்து ஒரு பவுன் ரூ.1,15,200க்கும் விற்றது. இதேபோல நேற்று வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.280க்கும், கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது. இதன் மூலம் தங்கம் விலை தொடர்ந்து 2 நாட்களில் பவுனுக்கு ரூ.3,120 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: