கல்லூரி மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப்

காரிமங்கலம், பிப். 14: காரிமங்கலம் அரசு பெண்கள் கல்லூரி மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் பொறுப்பு பாலாஜி தலைமை வகித்து, மாணவிகளுக்கு லேப்டாப்களை வழங்கினார். விழாவில் 2ம் ஆண்டு படிக்கும் 450க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துறை தலைவர்கள் ஜெயசீலன், கோபால் பேராசிரியர்கள் செந்தில்குமார் இளந்தரையன், ரமேஷ், கவுரவ விரிவுரையாளர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: