கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரியை ஒட்டி நடைபெறும் சிவாலய ஓட்டம் நிகழ்வு: மாவட்டத்திற்குள் டாரஸ் லாரிகள் நுழைய தடை விதிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரியை ஒட்டி நடைபெறும் சிவாலய ஓட்டம் நிகழ்வையொட்டி மாவட்டத்திற்குள் டாரஸ் லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மேற்கொண்டுள்ளது.

சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R.ஸ்டாலின் IPS தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறையினர் செய்துள்ளனர்.

* இதில் ஒவ்வொரு 2 கி.மீ. தூரத்திற்கும் இருசக்கர வாகன ரோந்து (Two Wheeler Patrol) என மொத்தம் 44 இரு சக்கர வாகன ரோந்தில் 88 போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

* போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் பார்க்கிங் வசதிகளுக்காக தனி போலீசார் பணியமர்த்தப்படுவார்கள்.

* முக்கியமான இடங்களில் பக்தர்களுக்கு உதவ “May I Help You” சாவடிகள் நிறுவப்படும்.

* பக்தர்களின் பாதுகாப்பிற்கு அவர்களின் பைகளில் Reflective strickers பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் ஓட்டப்படும்.

* பக்தர்களுக்கு வழிகாட்ட 12 இடங்களில் திசை மற்றும் தூரம் காட்டும் வரைபடங்கள் நிறுவப்படும்.

* பெண் பக்தர்களுக்கு உதவ பெண் காவலர்கள் நியமிக்கபடுவார்கள்.

* சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கனிமவள டாரஸ் கனரக வாகனங்கள் இரண்டு நாட்களுக்கு மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: