தங்கம் விலையில் திடீர் மாற்றம் பவுனுக்கு ரூ.1,520 குறைந்தது

சென்னை: தங்கம் விலை கடந்த 2 வாரமாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.1,16,800க்கு விற்றது. மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,790க்கும், பவுனுக்கு ரூ.1,520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,18,320க்கும் விற்றது. இதன் மூலம் நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.210, பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.14,600க்கும், பவுனுக்கு ரூ.1,520 குறைந்து ஒரு பவுன் ரூ.1,16,800க்கும் விற்பனையானது. வெள்ளி விலை நேற்று 3வது நாளாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கும், பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையானது.

Related Stories: