சென்னை: பாஜக அரசால் பல துரோகங்கள் நிகழ்ந்துள்ளன என்று தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டு நலனில் அக்கறை இல்லாமல் சமரசம் செய்துகொண்ட கூட்டம் இங்கு உள்ளது. நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என ஜெயலலிதா உறுதியாக இருந்தார். ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்டுள்ளார். நீட் தேர்வால் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தற்கொலைக்கு எடப்பாடிதான் காரணம் என்றும் கூறினார்.
