திருத்தணியில் மின்னணு வாக்குப்பதிவு விழிப்புணர்வு

திருத்தணி, பிப்.11: தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது. 330 வாக்குச்சாவடிகளை கோட்டாட்சியர் கனிமொழி தலைமையில் வருவாய்த்துறையினர் பார்வையிட்டு குடிநீர், கழிப்பிடம், மின்விசிறி உள்ளிட்ட வசதி ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். இதேபால், 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று திருத்தணி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் மூலம் வாக்காளர்கள் வாக்களித்து சரி பார்த்துக்கொள்ளும் செயல்முறை விளக்கங்கள் மாதிரி வாக்குப்பதிவு மூலம் தெளிவுபடுத்தப்பட்டது. கோட்டாட்சியர் அலுவலகம் வரும் பொதுமக்கள், மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகளை தெரிந்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வேட்பாளருக்கு வாக்களித்ததை உறுதி செய்ய விவி பேட் திரையில் வாக்களித்த சின்னம் 7 வினாடிகள் தெரிவதை உறுதி செய்துக்கொள்வது அவசியம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: