×

நீதிமன்றங்களுக்குள் குண்டர் ராஜ்ஜியத்தை ஏற்று கொள்ள முடியாது: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: “நீதிமன்றங்களுக்குள் குண்டர் ராஜ்ஜியத்தை ஏற்று கொள்ள முடியாது” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 7ம் தேதி மாவட்ட கூடுதல் நீதிபதி ஹர்ஜித் சிங் பால் டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரானார். அப்போது புகார்தாரருடன் தொடர்புடைய வழக்கறிஞர், பல குண்டர்களுடன் சேர்ந்து வழக்கறிஞர் ஹரிஜித் சிங் பால் மீது உடல்ரீதியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்தபோது நீதிபதியும், நீதிமன்ற உறுப்பினர்களும் அங்கே இருந்துள்ளனர்.

இதுகுறித்து விசாரிக்க கோரி வழக்கறிஞர் ஹர்ஜித் சிங் பால் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்சி மற்றும் என்.வி. அஞ்ஜாரியா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “பிப்ரவரி 7ம் தேதி நடந்த இந்த தாக்குதல் பற்றி டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தெரியப்படுத்தினீர்களா?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீதிமன்ற வளாகத்தில் இதுபோன்ற குண்டர்கள் ராஜ்ஜியத்தை ஏற்று கொள்ள முடியாது. இது சட்டத்தின் தோல்வி” என கடுமையாக தெரிவித்தனர்.

Tags : Supreme Court ,New Delhi ,Judge ,Harjit Singh Pal ,Tis Hazari Court ,Delhi ,
× RELATED ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை...