×

மர்ம நபர்கள் அட்டகாசம் மணிப்பூரில் வீடுகளுக்கு தீ வைப்பு

இம்பால்: மணிப்பூரில் வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள லிட்டன் கிராமத்தில் நேற்று முன்தினம் இரண்டு பழங்குடியின குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தங்க்குல் நாகா சமூகத்தை சேர்ந்தவர்களின் வீடுகளுக்கு சில ஆயுதம் ஏந்திய மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களையும் அவர்கள் தீயிட்டு கொளுத்தினார்கள். மேலும் குக்கி சமூகத்தை சேர்ந்தவர்களின் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டதாக தெரிகின்றது.

இதன் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்தனர். இந்த தீவைப்பு சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்வர் கெம்சந்த் சிங் தனது சமூக ஊடகப்பதிவில்,”அனைத்து சமூகத்தினரும் நிதானத்தை கடைப்பிடித்து அமைதி காக்க வேண்டும். காயமடைந்தவர்களை சந்தித்தேன். அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும். தவறான புரிதலால் ஏற்பட்ட இந்த சம்பவம் இப்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Manipur ,Imphal ,Liton ,Ukhrul district ,
× RELATED ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை...