×

செஷல்ஸ் நாட்டுக்கு ரூ.1587 கோடி நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: செஷல்ஸ் நாட்டுக்கு ரூ.1587 கோடி மேம்பாட்டு நிதியை இந்தியா அறிவித்துள்ளது. தீவு நாடான செஷல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். செஷல்ஸ் இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கிய கடல்சார் அண்டை நாடாகும். செஷல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கலந்துரையடாடினார். இதனைத்தொடர்ந்து நிலையான வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு பரந்த தொலைநோக்குப் பார்வையில் செயல்படுவதற்கு இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து செஷல்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடிரூ.1587 கோடி மதிப்புள்ள சிறப்புப் பொருளாதார தொகுப்பை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,”இந்தியாவும் செஷல்ஸூம் புவியியல் ரீதியாக மட்டுமல்லாமல் வரலாறு, நம்பிக்கை மற்றும் எதிர்காலத்திற்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையாலும் இணைக்கப்பட்டுள்ளன. மேம்பாட்டுக் கூட்டாண்மை தான் இந்தியா -செஷல்ஸ் உறவுகளின் வலுவான அடித்தளமாக இருந்து வருகின்றது. எங்களின் அனைத்து முயற்சிகளும் செஷல்ஸின் முன்னுரிமைகள் மற்றும் தேவைகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

இந்த திசையில் முன்னோக்கி சென்று இந்தியா செஷல்ஸ் நாட்டுக்கு ரூ.1587 கோடி மதிப்புள்ள சிறப்பு பொருளாதாரத் தொகுப்பை அறிவிக்க இருக்கிறது. இந்த தொகுப்பானது சமூக வீட்டுவசதி, போக்குவரத்து, தொழில்கல்விப் பயிற்சி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளில் உள்ள திட்டவட்டமான திட்டங்களுக்கு ஆதரவளிக்கும். இந்தியா -செஷல்ஸ் உறவுகளின் மிகப்பெரிய பலம் நமது மக்களுக்கு இடையேயான உறவுகள் தான். செஷல்ஸின் குடியேறியுள்ள இந்திய சமூகம், செஷல்ஸின் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது. அவர்கள் தலைமுறை தலைமுறையாக நமது நட்புறவையும் வலுப்படுத்தி உள்னர்” என்றார்.

Tags : Seychelles ,PM Modi ,New Delhi ,India ,President ,Patrick Hermine ,Indian Ocean region ,President… ,
× RELATED ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை...