சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து ரூ.1,17,200க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.15 உயர்ந்து ரூ.300க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. வாரத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,420க்கும், பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 15,360க்கும் விற்பனையானது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் நேற்று முன்தினம் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.285க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்று முன்தின விலையிலேயே நேற்றும் தங்கம் விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் எகிறியது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.15 உயர்ந்து ரூ.300க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இப்படியே விலை உயர்ந்தால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு தங்க நகை என்பது எட்டா கனியாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. அதே நேரத்தில் தற்போதைய சூழ்நிலையை பொறுத்தவரை தங்கம் விலை மேலும் அதிகரிக்க தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

Related Stories: