எம்ஜிஆர், ஜெ. படம் போட மாட்டாரா? டெபாசிட் கூட வாங்க மாட்டாரு…மீடியா மருது

 

அதிமுகவில் வட மாவட்டங்களில் மூத்த தலைவராக காட்டிகொள்பவர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் நின்று தோல்வியடைந்தார். இதற்கு காரணம் பாஜதான் என்று முதலில் குற்றம்சாட்டி அக்கட்சியை வசைபாடினார். அதே கருத்தை மற்ற மூத்த தலைவர்களும் முன்வைக்க கூட்டணி முறிவும் ஏற்பட்டது. ஆனால், தனது தந்திரத்தால் மீண்டும் ராஜ்யசபா எம்பியான பிறகு சி.வி.சண்முகம் டெல்லி மேலிடத்தில் ஏற்பட்ட நெருக்கத்தால் தற்போது ஒன்றிய பாஜ அரசின் துதிபாடியாக மாறி, தன்னை மறந்து அக்கட்சியை தூக்கிப் பிடித்து வருகிறார். அதிமுகவை வளர்த்த தலைவர்களை அவர் மறந்துவிட்டார்.

கடந்த சில நாட்களாக சி.வி.சண்முகம் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படம், இரட்டை இலை சின்னத்துடன், அண்ணா, எம்ஜிஆர், ெஜயலலிதா படம் இல்லாமல் பிரசாரம் செய்து வருகிறார். பொதுச் செயலாளரான எடப்பாடி வேட்பாளர் பட்டியலையே வெளியிடாத நிலையில் தன்னை வேட்பாளர்னு எப்படி முடிவு செய்தார்னும் அதிமுகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர். இவரது உடன்பிறந்த சகோதரர் இவருக்காக மயிலம் தொகுதியில் வாக்கு சேகரிக்கிறாரு. ஜெ மட்டும் இருந்திருந்தா இவரு அட்ரெஸ் இல்லாம போயிருப்பாரு. இவரு போன தேர்தல்லயாவது 15,000 வாக்குகளில் தோல்வியடைந்தார். இந்த தேர்தலுல டெபாசிட் வாங்கறதே கஷ்டம்னு நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.

Related Stories: