மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தேவாரப் பாடல் பெற்ற சட்டைநாத சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சுக்ர வார வழிபாடு நடக்கும். இதில் கலந்து கொண்டால் எதிர்ப்புகள் விலகும். நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். கடந்த மாதம் எடப்பாடியின் மனைவி ராதா சுக்ர வார வழிபாட்டில் கலந்து கொண்டு, கணவர் முதலமைச்சராக வேண்டி சென்றாராம்.
இதேபோல் மாஜி அமைச்சர்கள் ஜெயபால், வளர்மதி ஆகியோரும் சீட் கிடைக்க வேண்டுதல் நடத்தினர். கடந்த வெள்ளிக்கிழமை சுக்ர வார வழிபாட்டில் மாஜி அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, வைகைச் செல்வன் தரிசனம் செய்தனர். இப்படி மாஜி அமைச்சர்கள், மாஜி எம்பி, எம்எல்ஏக்கள், குடும்பத்தினர் சுக்ரவார பூஜைக்கு படையெடுக்கிறாங்களாம்.
