நயாரா நிறுவன பங்க்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

 

சென்னை: நயாரா நிறுவன பங்க்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. நயாரா பங்க்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5.30, டீசல் லிட்டருக்கு ரூ.3 உயர்ந்தது. நயாரா பெட்ரோல் 1 லிட்டர் ரூ.107.93க்கும், டீசல் ரூ.97.22க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் சிலிண்டர் புக் செய்து வாங்குவதே பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. ஏற்கனவே பொதுமக்களுக்கு இருக்கும் கவலையில் தற்போது மேலும் ஒரு சிக்கலாக பெட்ரோல் – டீசல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

தற்போது ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. அதோடு ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவைத்துள்ளது. இதனால் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு வரும் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஹைதராபாத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வரும் நாட்களில் பல நகரங்களில் இந்த பிரச்சனை ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நயாரா நிறுவனம் தற்போது பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்துள்ளது.

நயாரா என்பது தனியார் நிறுவனம். தற்போதைய சூழலில் அங்கு மட்டும் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில் பிற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் பெயரில் இயங்கும் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: