என்னை தொந்தரவு பண்ணாதீங்க… ப்ளீஸ்…! வானதி அப்செட்

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வசதியாக பாஜவில் தேர்தல் தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அண்ணாமலை தன்னால் முடியாது என்று வெளிப்படையாகவே அறிவித்து தேர்தல் பொறுப்பில் இருந்து கழன்றுகொண்டார். ஆனால் வானதி, தமிழிசை உள்ளிட்டோர் வெளிப்படையாக சொல்ல முடியாமல் அதிருப்தி நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக வானதி இந்த முறை கோவை தெற்கு தொகுதிக்கு பதிலாக வடக்கு தொகுதியை குறிவைத்துள்ளார். ஆனால் இதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எனவே தொகுதியை உறுதி செய்வதில் சிக்கல் நீடித்து வருகின்றது. இந்த சூழலில் திருப்பூர் தெற்கு, குன்னூர் உள்ளிட்ட தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் வானதிக்கு இதில் விருப்பம் இல்லையாம். நியமனம் செய்த பிறகு திருப்பூர் தெற்கு தொகுதியில் சில வார்டுகளில் நடைபெற்ற பூத் முகவர்கள் கூட்டத்தில் சம்பிரதாயத்திற்காக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினாராம். அதோடு மட்டுமல்லாது, என்னுடைய தொகுதியையும் பார்க்க வேண்டி உள்ளதால் அடிக்கடி தொந்தரவு செய்யாமல் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அன்பு கட்டளையும் போட்டுள்ளாராம்.

Related Stories: