அதிமுக- பாஜ கூட்டணியில் இணைய ஓபிஎஸ் திட்டம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வருகிறார். இவருடன் இணைந்து செயல்பட்ட அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் தே.ஜ. கூட்டணியில் இணைந்து விட்டார். ஓபிஎஸ்சை அதிமுகவிலும், கூட்டணியிலும் சேர்க்க மாட்டேன் என எடப்பாடி திட்டவட்டமாக கூறினார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எந்த முடிவும் எடுக்க முடியாமல் ஓபிஎஸ் திடீர் மவுனமாகவே இருந்து வந்தார்.

இதனால் அவருடன் இருந்த நிர்வாகிகள் பலர் மாற்று கட்சிகளுக்கு சென்று விட்டனர். இன்னும் சிலர் மாற்று கட்சிகளுக்கு தாவவும் தயாராகி வருகின்றனர். ஓபிஎஸ், திமுக அணிக்கு செல்லப்போகிறார், தவெக பக்கம் சாயப்போகிறார் என்றெல்லாம் பல்வேறு யூகங்கள் கிளம்பின. இந்நிலையில் மவுனமாக இருந்து வந்த ஓபிஎஸ் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க, ஓபிஎஸ் தேதி கேட்டுள்ளாராம். இன்னும் 2 நாளில் ஓபிஎஸ் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி பாஜ வட்டாரத்தில் விசாரித்த போது, ஓபிஎஸ்சும் பாஜ அணியில் இருக்க அமித்ஷா விரும்பினார்.

இதனால் அவருடன் பாஜ சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை ஏற்று ஓபிஎஸ், பாஜ அணியில் இணைய முடிவு செய்துள்ளார். விரைவில் அவர் அமித்ஷாவை சந்திக்க உள்ளார். எடப்பாடி பழனிசாமியை, அமித்ஷா சமாதானப்படுத்தி விடுவார். வரும் 1ம்தேதி மோடி தமிழகம் வரும் போது அவருடன் மேடையில் ஓபிஎஸ்சும் ஏறுவார் என தெரிவித்தனர்.

* அப்பாடா!… ஒரு வழியாக மவுனத்தை கலைத்து விட்டார்: பாஜவுக்கு 80, அன்புமணிக்கு 23
அதிமுக – பாஜ கூட்டணியில் சீட் பங்கீடு விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 80 தொகுதிகளை பாஜவுக்கு அதிமுக கொடுத்து விடுமாம். அதில் பாஜ 49 இடங்களில் போட்டியிடுமாம்.

அமமுக 14 இடங்கள் கேட்டுள்ளதால் 10 முதல் 12 இடங்கள் அமமுகவுக்கு ஒதுக்கப்படலாம். ஓபிஎஸ்சுக்கு 6 இடங்கள் தர முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மற்ற இடங்களை வாசன், கிருஷ்ணசாமி, பாரிவேந்தர், ஏ.சி.சண்மும் போன்றோருக்கு பிரித்து கொடுப்பார்களாம். அதேபோல் அதிமுக, 23 தொகுதியை பாமகவுக்கு (அன்புமணி தரப்பு) ஒதுக்குமாம். மீதி உள்ள 131 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுமாம்.

Related Stories: