உங்க ஆதரவு வேணாங்க.. இடத்தை காலி பண்ணுங்க…..தவெக நிர்வாகிகளுக்கு வச்சாங்க ஆப்பு

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக கூட்டமைப்பு சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தவெக திருப்பூர் மாநகர மாவட்ட துணைச் செயலாளர் குத்புதீன் தலைமையில் கட்சி துண்டோடு வந்தனர். கட்சி ரீதியாக உங்களது ஆதரவு வேண்டாம்.

எங்கள் அமைப்பு கட்சி ரீதியானதாக இல்லை. கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு கவனம் செலுத்தும். உங்கள் ஆதரவு இப்போது தேவையில்லை என போராட்டக்குழுவினர் தெரிவித்ததால் அதிருப்தி அடைந்த தவெகவினர் ஏன் நாங்கள் ஆதரவு தெரிவிக்க கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முதலில் எங்கள் கோரிக்கை என்ன என்பதே உங்களுக்கு தெரியாது. கட்சி ரீதியாக நீங்கள் முதலில் அரசியல் செய்யுங்கள். அதற்கு பிறகு எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் கட்சி துண்டு போட்டபடி கெத்தாக வந்த தவெகவினர் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.

Related Stories: