அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி

மும்பை: உலக கோப்பை டி20 ஆடவர் கிரிக்கெட்டில் நேற்றிரவு மும்பையில் நடந்த ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் உள்ள இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்ய இந்திய அணியின் ஓபனராக இறங்கிய நட்சத்திர ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.

தொடர்ந்து மற்றொரு ஓபனர் இசான் கிசன் 20 ரன், திலக் வர்மா 25 ரன்னிலும், சிவம் துபே டக் அவுட் ஆக இந்திய அணி பவர் பிளேயில் 46 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் மறுபுறம் நங்கூரமாய் நின்ற கேப்டன் சூரியகுமார் யாதவ் 31 பந்தில் அரை சதமடித்து அசத்தினார். தொடர்ந்து ரிங்கு சிங் 6 ரன், ஹர்திக் பாண்டியா 5 ரன், அக்சர் பட்டேல் 14 ரன், அர்ஷிப் சிங் 4 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றினாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் சூரியகுமார் யாதவ் 49 பந்தில் 10 போர், 4 சிக்சருடன் 84 ரன் குவித்து இந்தியா கவுரமான ஸ்கோரை எட்ட உதவினார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்க அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

Related Stories: