- மோடி
- மதுரை
- தேசிய ஜனநாயக கூட்டணி
- அஇஅதிமுக
- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம்
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜ தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளது. இக்கூட்டணியின் சார்பில் கடந்த ஜன. 23ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் முதல் பிரசார கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இதைத் தொடர்ந்து வரும் 28ம் தேதி மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும், இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே இந்த இடத்தில் 27.9.2019ல் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மீண்டும் அதே இடத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரம் கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் பிப். 28ல் மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார கூட்டம் மார்ச் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மதுராந்தகத்தில் கடந்த மாதம் 23ம் தேதி நடந்த கூட்டமும் முதலில் மதுரையில் நடப்பதாகத்தான் அறிவிக்கப்பட்டது. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட காரணங்களால் மதுராந்தகத்திற்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பிப். 28ல் மதுரை மண்டேலா நகரில் நடப்பதாக அறிவிக்கப்பட்ட கூட்டமும் திடீரென மார்ச் 1ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
