சென்னை ஐஐடி யூனிகான் நிறுவனத்துடன் இணைந்து ரூ.1000 கோடிக்கு நிதி திரட்டி தொழில் முனைவோர்கள் உருவாக்க திட்டம்: ஐஐடி இயக்குநர் காமகோடி பேட்டி

சென்னை: சென்னை, ஐஐடியில் தொழில் முனைவோர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி அதனை உற்பத்தி பொருளாக மாற்றுவதற்கான உச்சி மாநாடு நேற்று முதல் நாளை வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பொறியியல் சார்ந்த தொழில்நுட்பங்கள் ஸ்டார்ட்டப்களில் ரோபோடிக்ஸ் விண்ணில் தொழில்நுட்பம் பாதுகாப்பு துறை தொழில்நுட்பம் செமி கண்டக்டர் போன்ற பல்வேறு தொழில்களை துவங்குவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை தெரிவிக்கலாம்.

அதன் அடிப்படையில் அவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு தேவையான நிதிஉதவி சென்னை ஐஐடி யூனிகான்ஸ் நிறுவனத்தின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி நிருபர்களிடம் கூறியதாவது: ஐஐடி மெட்ராஸ், யுனிகார்ன் இந்தியா ஆகியவை இணைந்து ரூ.600 கோடி முதல் ரூ.1000 கோடி மதிப்பிலான நிதியை, ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் துவங்குவதற்காக மூலதனமாக அறிவிக்கிறோம்.

சராசரியாக ஒரு நிறுவனத்திற்கு 8-9 கோடி வரையிலான முதலீடு இருந்தால் அவர்களால் பெரிய நிறுவனமாக உயர முடியும். உதாரணத்திற்கு, அதார் நிறுவனத்திற்கு ரூ.5000 நிதி கொடுத்தது ஐஐடி. ஆனால் இப்போது 100 கோடி ஷேர்களை ஐஐடி நிறுவனத்திற்கு கொடுத்து வருகிறது அந்த நிறுவனம்.

இதில் ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் தங்களின் நிறுவனங்களை பதிவு செய்வதன் மூலம், அவர்களின் புதிய சிந்தனை மற்றும் திறனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான நிதியை வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளோம். இந்த வாய்ப்பின் மூலமாக நிதியை பெறும் நிறுவனங்களுக்கு வட்டி விகிதத்தில் கடனாக இல்லாமல், மாறாக அந்த நிறுவனங்கள் வருமான பகிர்வு முறையில் ஐஐடி மெட்ராஸ் உடன் ஷேர்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்கான தனி வலைதளம் மற்றும் அடுத்தடுத்த பணிகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ளோம்.

Related Stories: