கொரட்டூரில் கூடுதல் மின் மோட்டார் பணி கழிவுநீர் உந்து நிலையம் 2 நாட்கள் செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: அம்பத்தூர் மண்டலம், கொரட்டூர் கழிவுநீர் உந்து நிலையத்தில் புதிய கூடுதல் மின் மோட்டார் இறைப்பான் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், வரும் 9ம் தேதி காலை 10 மணி முதல் 10ம் தேதி இரவு 10 மணி வரை (36 மணி நேரம்) இந்த கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் அதனை சார்ந்த கீழ்கண்ட கழிவுநீர் உந்து நிலையங்கள் தற்காலிகமாக செயல்படாது.

எனவே, அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட இடங்களில் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு கீழ்க்காணும் பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். கருக்கு கழிவுநீர் உந்து நிலையம், ஐயன்குளம் கழிவுநீர் உந்து நிலையம், கருப்பன்குளம் கழிவுநீர் உந்து நிலையம், லெனின் நகர் கழிவுநீர் உந்து நிலையம், சங்கம் கழிவுநீர் உந்து நிலையம், தென்றல் நகர் கழிவுநீர் உந்து நிலையம், விஓசி கழிவுநீர் உந்து நிலையம், நேரு நகர் கழிவுநீர் உந்து நிலையம், பள்ளம் கழிவுநீர் உந்து நிலையம், எஸ்ஆர்பி நகர் கழிவுநீர் உந்து நிலையம், விவேகானந்தா நகர் கழிவுநீர் உந்து நிலையம்,

கச்சனாங்குப்பம் கழிவுநீர் உந்து நிலையம், டீச்சர்ஸ் காலனி கழிவுநீர் உந்து நிலையம், சிட்கோ கழிவுநீர் உந்து நிலையம், குளக்கரை கழிவுநீர் உந்து நிலையம், அத்திப்பட்டு கழிவுநீர் உந்து நிலையம், ஐசிஎப் கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் இளங்கோ நகர் கழிவுநீர் உந்து நிலையம் ஆகியவற்றுக்கு, பகுதி பொறியாளர் / துணை பகுதி பொறியாளரை 8144930907, 8144930218, 8144930219, 8144930257 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories: