டொக்கு விழுந்த கட்சியில செங்ஸ்: பாஜ கிண்டல்

சேலத்தில் பாஜ மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டிற்கு வரும் மார்ச் 1ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி வருகிறார். என்டிஏ கூட்டணி சார்பில் மதுரையில் நடக்கும் பிரசார கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார். பிரதமர் வருவதற்கு முன்னதாக இன்னும் பல கட்சிகள் எங்களது கூட்டணியில் சேரும். கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜ நடத்தவில்லை. தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை.

எடப்பாடி பழனிசாமி தான் தலைவர். அவருக்கு பின்னால் தான் நாங்க இருப்போம். மதுராந்தகம் கூட்டத்தில் கூட பிரதமர் மோடி படத்தோட அளவுக்கு எடப்பாடி படத்தை வைத்தோம். ஒரு இன்ச்சாவது குறைஞ்சுதா, குறைந்திருக்காது. கூட்டத்திற்கு நாங்க ஏற்பாடு செய்தாலும், முதலில் யார் வரவேற்று பேசினார், வேலுமணி தானே. அதனால் தான் சொல்கிறோம், எங்க கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்கிறது.

கடந்தமுறை மதுராந்தகம் கூட்டத்திற்கு முன்பாக டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்ந்தது போல், இங்கும் பல கட்சியினர் சேருவார்கள். பிரதமரையோ, அமித்ஷாவையோ யார் வேண்டுமானாலும் சந்தித்து பேசலாம். செங்கோட்டையன் கூட டெல்லி சென்று சந்தித்தார். கடைசியில் அவர் டொக்கு விழுந்த கட்சியில் (தவெக) சேர்ந்து விட்டார். அவர் நிலைமை அப்படி ஆகிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: