காவலர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாததால் ஐஜி ராஜேஸ்வரி, எஸ்பி நாகஜோதி மாற்றம்: பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்

சென்னை: சீருடைப்பணியாளர் தேர்வில் காவலர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டு முறையில் உச்ச நீதிமன்றம் மற்றும் அரசாணையை முறையாக பின் பற்றாமல் பணி மூப்பு பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியால் சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஐஜியாக இருந்த ராஜேஸ்வரி மற்றும் எஸ்பி நாகஜோதி பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில், காவல்துறையில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் முதல் நிலை காவலர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு எஸ்ஐ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் உடல் தகுதி தேர்வில் விழுப்புரம் மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் தேர்வில் அளவீடுகள் குளறுபடிகள் இருந்ததாகவும்,

அதேநேரம் காவல்துறையில் இரண்டாம் நிலை மற்றும் முதல் நிலை காவலர்களாக பணியில் இருந்து எஸ்ஐ தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓராண்டு பயிற்சியின் போது காவல்துறை அதிகாரிகள் காவல்துறையில் பணியில் இருந்தவர்களுக்கு மட்டும் அதிக மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டதாகவும், பொது பிரிவில் நேரடியாக எஸ்ஐ தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பயிற்சியின் போது மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்த குளறுபடியால் நேரடியாக பொதுப்பிரிவில் தேர்வான எஸ்ஐக்களுக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் அவர்கள் பணி முப்பு பட்டியல் தயாரிக்கும் போது, மதிப்பெண் விகிதத்தில் காவல்துறையில் இருந்து எஸ்ஐ தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால் தங்களின் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் பாதிக்கப்படுவதாக பொதுப்பிரிவில் தேர்வான எஸ்ஐக்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சீருடை பணியாளர் தேர்வாணையம் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தான் பணி மூப்பு வழங்க வேண்டும். ஓராண்டு பயிற்சி காலத்தில் வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலின்படி பணி மூப்பு வழங்க கூடாது என்று சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டது.  அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் நீதிமன்றம் அறிவுரைப்படி அரசாணை வெயிட்டுள்ளது.

ஆனால், நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசாணைப்படி எஸ்ஐ தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி மூப்பு வழங்காமல் வழக்கம் போல் கடந்த 30 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது போல், 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் காவல்துறையில் பணியாற்றி எஸ்ஐ தேர்வு எழுதி வெற்றி ெபற்றவர்களுக்கு ஓராண்டு பயிற்சி காலத்தில் அதிக மதிப்பெண் வழங்கி பணி மூப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் மத்தியில் பெரும் பிரச்னை ஏற்பட்டள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசு அரசாணை வெயியிட்டும் அந்த நடைமுறையை பின்பற்றாமல் மீண்டும் 30 ஆண்டுகளாக பின்பற்றி வந்த நடைமுறையை செயல்படுத்தியதால் சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜியாக இருந்த ராஜேஸ்வரி மற்றும் எஸ்பி நாகஜோதி ஆகியோரை தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ் குமார் அதிரடியாக பணியிடம் மாற்றி உத்தரவிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: