பார்வையற்றோர் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்: எஸ்.பி தலைமையில் குழு அமைக்க உத்தரவு

மதுரை: திருச்சியில் பார்வையற்றோர் பள்ளியில் பயின்ற 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததாக வழக்கு தொடரப்பட்டது. பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்துள்ளதாக மனுதாரர் புகார் அளித்தார். மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஜடி விசாரணைக்கு மாற்ற கோரி அவரது தாய் கமலா தொடர்ந்த வழக்கில் திருச்சி மாவட்டம் எஸ்.பி தலைமையில் குழு அமைத்து 4 வாரத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: