கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் பிப்.14 வரை நடக்கிறது

திண்டுக்கல் பிப்.5: திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் பிப்.14ம் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி இருவார சிறப்பு முகாமானது, அந்தந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட கால்நடை நிலையங்களில் நடைபெற உள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ஒவ்வொரு ஆண்டும் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் பிப்ரவரி மாதம் கோழிக்கழிச்சல் நோய்த்தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் பிப்.14ம் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய்த்தடுப்பூசி இருவார சிறப்பு முகாமானது, அந்தந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட கால்நடை நிலையங்களில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள கோழி வளர்க்கும் பயனாளிகள் அனைவரும் அவர்களது கிராமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கால்நடை நிலையங்களில், தங்கள் கோழிகளுக்கு நோய்த் தடுப்பூசி செலுத்தி கோழிக் கழிச்சல் நோய் வராமல் பாதுகாத்து கொள்ளலாம். என தெரிவித்துள்ளார்.

 

Related Stories: