6 கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி

வத்தலக்குண்டு, பிப். 5: வத்தலக்குண்டு காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். விவசாயியான இவர் ஏராளமான பசுமாடுகளை பராமரித்து, பால் பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் பண்ணைக்கு புதிதாக வந்த பசுமாடு ஒன்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கன்று ஒன்றை ஈன்றது.

ஆனால் கன்று 6 கால்களுடன் பிறந்ததை கண்டு ரஞ்சித் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் 3 மாதங்களை கடந்து, அந்த கன்றுக்குட்டி நன்கு வளர்ந்து ஆரோக்கியமாக உள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

 

Related Stories: