நாகப்பட்டினம்,பிப்.5: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் உணவு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த ஒரு நாள் பயிற்சி நாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி கூட்ட அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் சித்ரா தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர்கள் சரவணன், செந்தில்குமார், ஜோதிஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுனர் ஸ்ரீரங்கபாணி பயிற்சி அளித்தார்.
இதில் உணவு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் வாழ்வாதரத்திற்கான இணைப்பு, இணைப்பு ஊட்டச்சத்து குறைபாடு சுழற்சி மற்றும் ஆயிரம் நாட்கள் பராமரிப்பு முறை, தாய்வழி ஊட்டச்சத்து, தாய்ப்பால் மற்றும் இணை உணவு, பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு, ரத்த சோகை, ஊட்டச்சத்து தோட்டம் பற்றிய பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
