×

புளியந்தோப்பில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை: காதல் தோல்வியா?

 

பெரம்பூர்: புளியந்தோப்பில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். காதல் தோல்வியால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். சென்னை புளியந்தோப்பு விஓசி நகரை சேர்ந்தவர் சேகர்பாபு. இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கியில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஷாம்பிரதீஷ் (18). இவர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாணடு படித்து வந்தார். நேற்று காலை நடைபயிற்சி சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து தனது அறையில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார். இதன்பிறகு காலை 10 மணிக்கு மேலாகியும் சாப்பிட வராததால் தாய் பத்மா சென்று பார்த்துள்ளார்.

அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் தாயின் புடவையால் தூக்கு மாட்டிக்கொண்டு ஷாம்பிரதீஷ் மயக்க நிலையில் கிடப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பின்னர் ஷாம் பிரதீஷை மீட்டு ஆட்டோ மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் அவர் இறந்துவிட்டார் என்பது தெரிந்தது. இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். ஷாம் பிரதீஷ் ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.

படிக்கின்ற வயதில் காதல் வேண்டாம் என்று காதலியின் வீட்டில் அறிவுறுத்தியதால் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தி காரணமாக ஷாம்பிரதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

Tags : Pulianthope ,Perambur ,Sekarbabu ,VOC ,Nagar ,Chennai ,Nungambakkam ,
× RELATED அஜித்குமார் நகை திருடியதாக நிகிதா...