×

கோவை அருகே ரயில் மோதி யானை பலி

 

பாலக்காடு: கோவை அருகே வாளையாரில் இன்று ரயில் மோதி யானை பலியானது. கேரளாவில் தமிழக எல்லையில் கோவை மாவட்டத்தையொட்டி வாளையார் உள்ளது. இங்குள்ள வட்டப்பாறை மான்பார்க் பகுதியில் கடந்த 2 நாட்களாக யானைகள் நடமாட்டம் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கஞ்சிக்கோடு மதுக்கரை ஏ டிராக் தண்டவாளத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஒற்றை யானை ஒன்று ரயில் மோதி இறந்து கிடந்தது.

இதையறிந்த வனத்துறை, வாளையார் போலீசார், ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் ஏ டிராக்கில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பி, மற்றும் சி டிராக் தண்டவாளங்களில் ரயில்கள் இயக்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Coimbatore ,Valiyar ,Kerala ,Tamil Nadu border ,Coimbatore district ,Vattapparai Man Park ,
× RELATED கார் வாங்க ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ.35...