×

மறியல் வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத அர்ஜூன் சம்பத்துக்கு வாரண்ட்

 

சேலம்: சேலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாததால் அர்ஜூன் சம்பத்துக்கு வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின் சார்பில், கடந்த 2022ம் ஆண்டு சேலம் ஜங்சன் தலைமை தபால் நிலையம் முன்பாக போலீஸ் அனுமதியின்றி மறியல் போராட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் அர்ஜூன் சம்பத் உள்பட 22 பேரை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதில் அர்ஜூன் சம்பத் 2 வாய்தாவிற்கு வரவில்லை. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் அர்ஜூன் சம்பத் மற்றும் பொன்னுசாமி, ஸ்ரீகண்ணன், ஏழுமலை, புவனேஸ்வரன், கண்ணன் ஆகியோர் ஆஜராகவில்லை. இதற்கான மனுவும் ெகாடுக்கவில்லை. இதையடுத்து இவர்களுக்கு வாரண்ட் பிறப்பித்து நீதித்துறை நடுவர் தினேஷ்குமரன் உத்தரவிட்டதுடன், வழக்கை வருகிற 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Arjun ,Salem ,Hindu People's Party ,Salam Jangshan Central Post Office ,
× RELATED அஜித்குமார் நகை திருடியதாக நிகிதா...