×

தேசத்தை சீரழிக்கும் என்டிஏ கூட்டணி: திண்டுக்கல் லியோனி பேட்டி

 

வாழப்பாடி: தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்டிஏ கூட்டணி என்று ஒரு கூட்டணி அமைத்து ஏதோ டபுள் எஞ்சின் சர்க்கார் தமிழகத்திற்கு நல்லது செய்வது போல மோடியின் கம்பெனி, எடப்பாடி பழனிசாமி சேர்ந்து ஆசைக்காட்டி கொண்டிருக்கிறார்கள். அது என்டிஏ கூட்டணி அல்ல, நேஷனல் பிசாஸ்டர் அலையன்ஸ். தேசத்தை சீரழிக்கும் கூட்டணி தான் என்டிஏ கூட்டணி. ஆனால் 2019ல் இருந்து கொள்கை பிடிப்போடு இருக்கக்கூடிய உறுதியான கூட்டணியை திமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் முழுவதுமாக நம்பி இருக்கிறார்கள்.

இன்று புதிதாக கட்சி தொடங்கி இருக்கக்கூடிய விஜய்யின் கடைசி கூட்டத்திலேயே அவர் எப்படிப்பட்டவர் என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள். அவர் ஏதோ விளையாட்டுத்தனமாக 4 கருத்துக்களை தகர டப்பா, பவள விழா பாப்பா, அப்படின்னு சொல்லிட்டு ஒரு பாடகரோட குத்தாட்டம் போட்டார். இவரை நம்பி நாட்டை ஒப்படைத்தால் குத்தாட்டம்தான் போடுவார்கள். திட்டங்கள் ஏதும் நடக்காது என்று மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர்.

Tags : NDA alliance ,Dindigul Leoni ,Vazhappadi ,Tamil Nadu Textbook Association ,President ,Vazhappadi, Salem district ,Modi ,Edappadi ,Tamil ,Nadu ,NDA ,
× RELATED அஜித்குமார் நகை திருடியதாக நிகிதா...