×

முதுகுளத்தூர் அருகே கல்லூரி பஸ் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி: 5 மாணவிகள் காயம்

 

சாயல்குடி: முதுகுளத்தூர் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதியதில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலியானார். 5 மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் தனியார் கல்லூரி கல்லூரி உள்ளது. இங்கு கருமலை கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை, முதுகுளத்தூர் அருகே கொழுந்துறையில் பகுதியில் 5 மாணவிகளை பஸ்சில் ஏற்றிக் கொண்டு தேரிருவேலி வழியாக கீழக்கரை நோக்கி சென்றார்.

உத்தரகோசமங்கை சாலையில் எதிரே நெடியமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் மருதுபாண்டி (40) என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மீது பஸ் மோதியது. இதில், படுகாயமடைந்த மருதுபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். மோதிய வேகத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகிலிருந்த பண்ணை குட்டைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த 5 மாணவிகள் காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த கீழத்தூவல் போலீசார் காயமடைந்த மாணவிகளை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Mudukulathur ,Sayalgudi ,Keezhakarai, Ramanathapuram district ,Raja ,Karumalai ,
× RELATED நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள் ஒப்படைப்பு