- லைக்காய் மாடுசந்தா வேலூர்
- வேலூர்
- Tirupathur
- Ranipetta
- திருவள்ளூர்
- கிருஷ்ணகிரி
- தர்மபுரி
- சேலம்
- ஆந்திரா
- கர்நாடக
வேலூர்: வேலூர் பொய்கை மாட்டுச்சந்தையில் இன்று ரூ.70 லட்சத்தக்கு மேல் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கை கால்நடை சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். இந்நிலையில் வழக்கம்போல் இன்று மாட்டுச்சந்தை கூடியது.
இதில் கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 1200க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் வியாபாரம் களைக்கட்டியது. விற்பனை அமோகமாக நடந்ததால் ரூ.70 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் ‘வேலூர் மாவட்டத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் வரும் காலங்களில் தீவனம் தட்டுப்பாடு ஏற்படும்.
அப்போது மாடுகள் விற்பனை செய்தால் குறைந்த விலைக்குதான் போகும். அதனால் முன்கூட்டிய கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், இன்று நடந்த சந்தைக்கு அதிகளவு மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. வியாபாரமும் விறுவிறுப்பாக இருந்தது. இதனால் ரூ.70 லட்சத்திற்கு மேல் வியாபாரம் நடந்துள்ளது என்றனர்.
