சென்னை: தொழில் முனைவோருக்கான மூன்று நாள் மீடியா ட்ரோன் பயிற்சி வகுப்பு வரும் 9 ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில் தொழில் முனைவோருக்கான மீடியா ட்ரோன் பயிற்சி வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு, செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள், ஆவணப்பட தயாரித்தல், விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங், கார்ப்பரேட் திரைப்படங்கள், யூடியூப் மற்றும் சமூக ஊடக உள்ளடக்க உருவாக்கம், காவல் மற்றும் ராணுவ கண்காணிப்பு, நிகழ்ச்சி செய்தி களிப்பு, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை, ரியல் எஸ்டேட் புகைப்படம் / வீடியோ தயாரித்தல், தொழிற்துறை புகைப்படம், காடு மற்றும் விலங்கியல் புகைப்படம், தீ மற்றும் மீட்பு பணிகள், அரசு திட்டங்கள் கற்று தரப்படும். எனவே, ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் (ஆண்/பெண் /திருநங்கைகள்/ திருநம்பிகள்/ தொழில்முனைவோர்கள்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப் பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.tn என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். மேலும், 9360221280 / 8668100181 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
