ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்தவர் சி.ஜே.ராய். பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவரது பெங்களூருவில் உள்ள தலைமையகத்தில் வருமான வரித்துறை சோதனையின்போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தவேண்டும் என்று கூறி ஒன்றிய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: வருமானவரித்துறை சோதனையின் போது 2 சாட்சிகள் இருக்க வேண்டும் என்ற நெறிமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் கொடுத்த பின்னரும் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாக ராய் கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது துரதிர்ஷ்டவசமானதாகும். எனவே இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: