- ஆந்திரப் பிரதேசம்
- அமைச்சர்
- முதல் அமைச்சர்
- சந்திரபாபு நாயுடு
- திருமலா
- அம்பதி ராம்பாபு
- குண்டூர் மாவட்டம்
- YSR காங்கிரஸ் கட்சி
திருமலை: ஆந்திர மாநிலம் குண்டூரை மாவட்டத்தை சேர்ந்தவர் அம்பதி ராம்பாபு (62). ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான இவர், முன்னாள் அமைச்சர் ஆவார். இவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்து அவ்வப்போது அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குண்டூர் மாவட்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவர் பில்லி மாணிக்ராவ் அளித்த புகாரின்பேரில் அம்பதி ராம்பாபு மீது போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்தனர். பின்னர் அவரை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர். அவரை குண்டூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர்.
