×

சூதாட்ட மோசடி விவகாரம் மியான்மரை சேர்ந்த மேலும் 4 பேரை தூக்கிலிட்டது சீனா

தைபே: சீன எல்லையை ஒட்டிய மியான்மரின் கோகாங்க் பிராந்தியத்தில் மிகப்பெரிய அளவில் ஆன்லைன் மற்றும் சூதாட்ட மோசடி மையங்கள் செயல்பட்டு வந்தன. குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்த சிலர், மோசடி மையங்களை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த மையத்திற்கு சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பலர் வேலைக்கு ஏமாற்றி அழைத்து வரப்பட்டு ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், பாலியல் தொழில், போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். இதற்கு மறுத்தவர்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டனர். அந்த வகையில் சீனாவைச் சேர்ந்த 6 பேர் மியான்மர் மோசடி கும்பலால் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து மியான்மர் நாட்டின் மோசடி கும்பல் குடும்பங்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரை சீனா கடந்த மாதம் தூக்கிலிடப்பட்டது. இந்நிலையில் நே்றறு மேலும் 4 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

Tags : China ,Myanmar ,Taipei ,Gokang region ,
× RELATED பாகிஸ்தான் ராணுவம் நடத்திய மெகா ஆபரேஷன்: 145 பலூச் போராளிகள் சுட்டுக்கொலை